உரை |
|
3. மகத காண்டம் |
|
20. சங்கமன்னர் உடைந்தது |
|
வேண்டி வந்த வேந்தனும்
வீய்ந்தனன்
ஈண்டினி யிவற்கே யியைந்த
பால்வகை ஆலு
முண்டஃ தறிவோர் யாரென 185 வாயின்
மிகுத்து வலித்துரைப் போரும்
|
|
(இதுவுமது) 182
- 185 : வேண்டி...............உரைப்போரும்
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட வேறுசிலர் ''ஆம் ஆம், நுங்கருத்து நன்றே ! அப்பதுமாபதியை
மணந்து கோடற்கு விரும்பி வந்த அச்சுவப்பெருமகனும் போர்க்களத்தே இறந்தொழிந்தான்.
இனி, இங்கு நுங்கருத்தின் படியே இப்பெருமகனுடைய ஆகூழ் இருத்தலும் கூடும். அவ்வூழினையாரே
யறிய வல்லார்!'' என்று தத்தம் வாய் வந்தனவெல்லாம் வலிந்து கூறுவோரும் ;
என்க.
|
|
(விளக்கம்) வேண்டிவந்த வேந்தன் : கேகய மன்னன். வீய்ந்தனன் - இறந்தனன்.
இவற்கு : உதயணனுக்கு. பால் - ஆகூழ். வாயடக்கமின்றி மனம் போனபடி மிகையாகப் பேசும்
பொது மக்களியல்பினை எடுத்துக் காட்டுவார் 'வாயின் மிகுத்து வலித்துரைப்போரும்'
என்றார்.
|