உரை |
|
3. மகத காண்டம் |
|
20. சங்கமன்னர் உடைந்தது |
|
பொன்னணி மார்பன் முன்ன
ராற்றிய நன்னர்க்
குதவும் பின்னுப
காரம் அலைதிரைப்
பௌவ மாடை
யாகிய நிலமுழுது
கொடுப்பினு நேரோ வென்மரும் 190 நகர
மாக்க ளிவைபல
பகர மாசில்
செங்கோன் மகத மன்னனொடு
கோயில்புக் கனனாற் கோமகன்
பொலிந்தென்.
|
|
(இதுவுமது) 186
- 192 : பொன்............பொலிந்தென்
|
|
(பொழிப்புரை) இனி, நன்றறி மாந்தர் சிலர், ''திருமகள் வீற்றிருந்து அழகு
செய்யும் மார்பினையுடைய வத்தவ வேந்தன் முன்னர் யாம் யாதும் உதவி செய்யாமலேயே
செய்த இவ்வுதவிக்கு யாம் இனிச் செய்யவிருக்கும் கைம்மாறாக அலைகின்ற திரைகளையுடைய
கடலை ஆடையாக உடுத்த இந்நிலவுலகம் முழுதையும் வழங்கினும் ஒப்பாகுமோ?'' என்பாரும்
இவ்வாறு அந்நகர் வாழ் மாந்தர் இன்னோரன்ன பற்பல மொழிகளைக் கூறி வாழ்த்திப்
பாராட்டா நிற்ப: இறைமகனாகிய உதயணகுமரன் குற்றமற்ற செங்கோலையுடைய அம்மகத
மன்னனோடு வெற்றிப் பொலி வெய்தி அரண்மனையின் கண் புகுவானாயினன் ;
என்க.
|
|
(விளக்கம்) பொன் - திருமகள். மார்பன் : உதயணன். ''முன்னராற்றிய
நன்னர்க்குதவும் பின்னுபகாரம் அலைதிரைப் பௌவமாடையாகிய நிலமுழுதும் கொடுப்பினு
நேரோ,'' என்னுமிதனோடு, ''செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது''
(குறள் 101) என வரும் திருக்குறளையும் நோக்குக. நன்னர்க்கு - நன்றிக்கு. பின்னுபகாரம்
- கைம்மாறு. பௌவம் - கடல். நேரோ - ஒப்போ. கோயில் - அரண்மனை. கோமகன் :
உதயணன்.
பொன் - திருமகள். மார்பன் : உதயணன். ''முன்னராற்றிய