பக்கம் எண் :

பக்கம் எண்:38

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்க
 
         
           தொண்பொற் சத்தித் திண்கொடி சேர்ந்து
           விண்ணிற் செல்லும் விளங்கொளி யவர்களை
           மண்ணிற் செல்வங் காணிய வல்விரைந்
     35    தடைதர்மி னென்னு மவாவின போல
           வடிபட வியங்கும் வண்ணக் கதலிகைக்
           கூந்த லணிந்த வேந்துநுதற் சென்னிக்
           கடியெயின் முதுமகள் காவ லாக
 
           (இதுவுமது)
         32 - 38 : ஒண்...............காவலாக
 
(பொழிப்புரை) அவ்வாயின் மாடமாகிய தலையிலே
  ஒள்ளிய பொன்னாலியன்ற சூலமாகிய திண்ணிய ஒழுங்கினைச்
  சேர்ந்து நின்று வானத்தே இயங்கா நின்ற விளங்கும் ஒளிபடைத்த
  தேவர்களை எம்முடைய நிலவுலகத்தேயுள்ள செல்வச்
  செழிப்பினைக்கண்டு மகிழ்தற்பொருட்டு மிகவும் விரைந்து ஈண்டு
  வாருங்கோள் என்று அழைக்கும் அவாவுடையன போன்று
  தம்மேற்காற்று மோதுதலானே அசையாநின்ற வண்ணமுடைய
  கதலிகைக் கொடிகளாகிய கூந்தலையும், அழகு செய்யப்பட்ட ஏந்திய
  நெற்றியினையும், சென்னியையுமுடைய காவலமைந்த மதில் என்னும்
  முதுமகள் தனக்குக் காவலாக அமையாநிற்ப என்க.
 
(விளக்கம்) சத்திக்கொடி-சூல ஒழுங்கு.
  ஒளியவர்கள்-தேவர் காணிய-காண, அடைதர்மின்-அடைமின்.
  வடி- வளி, (17-38) பாம்புரியாகிய மேகலையையும் நீராகிய
  துகிலையும் அகழியாகிய அல்குலையும் ஞாயிலாகிய
  முலையையும் கதவும் புதவுமாகிய பணதியையும் வாயின்
  மாடமாகிய முகத்தையும் கதலிகை யாகிய கூந்தலையும்
  நுதலையும் சென்னியையும் உடைய முதுமகள்