பக்கம் எண் :

பக்கம் எண்:382

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
           அலகைப் பல்லுயிர்க் கச்ச நீக்குநர்
           கவலை கொண்டுதங் காவலிற் றளரின்
           உலக மெல்லா நிலைதளர்ந் தழியும்
 
                        (இதுவுமது)
               57 - 59: அலகை ......... அழியும்
 
(பொழிப்புரை) ''பெருமானே! அளவு கடந்த பலவாகிய உயிர்கட்கெல்லாம் துன்பத்தால் வரும் அச்சத்தைப் போக்கிப் பாதுகாப்போராகிய அரசர்களே கவலைகொண்டு தங்காவற்றொழிலிற் றளர்ந்தால் இவ்வுலகில் வாழும் மன்னுயிரெல்லாம் நிலைதளர்ந்து அழிந்துபோம் அல்லவோ'' என்க.
 
(விளக்கம்) அலகை - அளவு, அளவிறந்த பல்லுயிரென்க. நீக்குநராகிய அரசரே என்க. காவல்-உயிர்களைக் காக்குந் தொழில், உலகம் - உயிரினங்கள் : ஆகுபெயர்.