பக்கம் எண்:384
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 21. மகட்கொடை வலித்தது | |
செருவடு குருசி லொருபக றானும்
மறுமொழி கொடாஅன் மனத்தே
நினைஇ 70 நறுமலர்க்
கோதையை நாட்பூங் காவினுட்
கண்ணுறக் கண்டதுங் கரந்தகம்
புக்கதும்
திண்ணிதி னறித்தோர் தெரிந்துதனக்
குரைப்ப
ஆராய்ந் ததனை யறிந்ததை
யொன்றுகொல்
கருதி வந்த காவல குமரனும்
75 பொருகளத் தவிந்தனன் பொருளிவற்
கீதல்
பின்னன் றாகு மென்பதை
நாடி நன்னர்
நோக்கி நயந்ததை யொன்றுகொல்
| | (உதயணன்
எண்ணுதல்) 68
- 77 : செரு..........ஒன்றுகொல் | | (பொழிப்புரை) பகைவரைப் போர்க்களத்திலே வெல்லுந்
தலைவனாகிய அவ்வுதயணன் அவ்வமைச்சனுடைய மொழிகளைக் கேட்டபின்னர் அவ்வமைச்சனுக்கு ஒரு
முழுத்தகாலம் மறுமொழி கூறாதவனாகித் தன்னெஞ்சத்தினுள்ளே அச்செய்தியை நினைந்து
ஆராய்பவன், தான் நறிய மலர்மாலையணிந்த பதுமாபதியை அன்றலர்ந்த பூங்காவினிடத்தே
கண்கூடாகக் கண்டதும், பின்னர் அப்பதுமாபதியின் சிவிகையின்கண் மறைந்து அவள்
கன்னிமாடத்தினூடே புகுந்ததும், ஆகிய இச்செய்திகளைத் திட்பமாக அறிந்தவர் பிறர்
யாரேனும் தமக்குள் ஆராய்ந்து கூற அத்தருசகன் தனக்குள் ஆராய்ந்து அந்நிகழ்ச்சியை
அறிந்து கொண்டமையாலே இவ்வாறு கருதியதொன்றோ? அல்லது, அப்பதுமாபதியை மணங்
கோடற்குக் கருதி ஈண்டுவந்த கேகய மன்னனும் போர்க்களத்தின்கண் இறந்தொழிந்தான்.
ஆதலின் அவளை இனி இவ்வுதயணனுக்கு வழங்குதல் தனக்குப் பின்னர் நன்மை பயக்கும் என்பதை
நாடி நன்கு ஆராய்ந்து இங்ஙனம் கருதியதொன்றோ; என்க. | | (விளக்கம்) குருசில் - தலைவன். ஒருபகல் - ஒரு முழுத்தம்.
நினைஇ- நினைந்து. ஆராய்பவன் - இங்ஙனம் ஆராய்ந்தான் என்க. கோதையை-
பதுமாபதியை. நாட்பூ - அன்றலர்ந்த மலர். சிவிகையுட்கரந்து என்க. அறிந்தோர்
தெரிந்து தனக்குரைப்ப அதனை ஆராய்ந்து என்க. அறிந்ததையொன்று கொல் - அறிந்ததனால்
உண்டான ஒரு கருத்தோ, கொல், ஐயப் பொருண்மைத்து. கருதி வந்த காவல குமரன் என்றது
அச்சுவப் பெருமகனை. அவிந்தனன் - இறந்தனன். இவற்கு ஈதல் பொருள், அது பின் நன்றாகும்
என மாறுக. இனி அவிந்த அவனுக்குப்பின் இவற்கு ஈதல் பொருள் எனினுமாம். நன்னர்- நன்கு.
நயந்ததனால் உண்டானதொரு கருத்தோ என்க. கொல், ஐயப் பொருண்மைத்து. அறிந்ததை -
நயந்ததை என்னும் ஈரிடத்தும் ஐகாரம்
சாரியை. |
|
|