பக்கம் எண் :

பக்கம் எண்:390

உரை
 
3. மகத காண்டம்
 
21. மகட்கொடை வலித்தது
 
         
     110    அமைப்பருங் கரும மமைத்தனன் யானென
           அமைச்சன் மீண்டன னகநனி புகன்றென்.
 
                 (அமைச்சன் தருசகன்பால் மீளல்)
                 110 - 111 : அமை............புகன்றென்
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணன் உடன்பாடு பெற்ற அவ்வமைச்சன் யான் செயற்கரும் செயல் செய்தேன் என்று உள்ளத்தின்கண் மிகவும் உதயணனை விரும்பித் தன்னரசன்பால் மீண்டனன்; என்க.
 
(விளக்கம்) அமைப்பருங்கருமம் - செயற்கருஞ் செயல். புகன்று -  விரும்பி.

             21. மகட்கொடை வலித்தது முற்றிற்று.