உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
வயத்தகு நோன்றாள் வயந்தகற்
றழீஇ
இசைச்ச னென்னு மென்னுயிர்த் தோழன்
20 அருமறை நாவி னந்தண
னவன்றனக்
கிருமுது குருவரு மிறந்தன
ராதலின்
வேதத் தியற்கையி னேதந்
தீரக்
கிரிசையின் வழாஅ வரிசை
வாய்மையோர்
அந்தணன் கன்னியை மந்திர விதியின்
25 அவன்பாற் படுத்த பின்ன
ரென்னையும்
இதன்பாற் படுக்க வெண்ணுக
தானென
என்கூற் றாக வியையக்
கூறி
முன்கூற் றமைத்து முடித்தனின் கடனென
|
|
(உதயணன்
வயந்தகனைத் தருசகன்பால்
அனுப்பல்) 18
- 28 : வய.........கடனென
|
|
(பொழிப்புரை) பின்னர், வலிமையால் தகுதியுடைய முயற்சியையுடைய
வயந்தகனை நோக்கி, ''அன்பனே ! 'இசைச்சனென்னும் என்னுயிர்த் தோழனாகிய அரிய மறை
யோதும் அந்தணன் ஒருவன் உளன். அவனுடைய தாயும் தந்தையும் அவனது இளமையிலேயே இறந்தனர்.
ஆதலின், வேதத்தினது இயல்பிற்கு ஏற்பக் குற்றம் தீரத் தமக்குரிய தொழிலினின்றும்
வழுவாத மரபினையுடைய வாய்மையுடைய ஓர் அந்தணன் மகளை மந்திர வகையினாலே அவனுக்குத்
திருமணம் செய்வித்தபின்னர், என்னையும் இத் திருமணத்தின்பால் ஈடுபடுத்தும் படி நீ
நினைக' என்று என்மொழி யாக அவன் இயையும்படி சொல்லி முன்னுரையோடு அவனை ஏற்பித்து
அக் காரியத்தை முடித்தல் உன்னுடைய கடனாகும்'' என்று ஏவா நிற்ப;
என்க.
|
|
(விளக்கம்) ''இசைச்சன்...எண்ணுக''. இதுகாறும் உதயணன் தன்
கூற்றாகக் கூறிக் காட்டியபடியாம். எனக்கு இசைச்சன் என்னுந் தோழன் ஒருவன் உளன். அவன்
அந்தணன். அவனுக்குக் குரவரும் இறந்தனர் ; ஆதலின், ஓர் அந்தணன் கன்னியை அவன்
பாற்படுத்த பின்னர் என்னையும் இதன் பாற் படுக்க எண்ணுக என்று என் கூற்றாகக் கூறி
என்றவாறு. அருமறை - உணர்தற்கரிய மறை. இருமுது குரவர் - தாய்தந்தையர். கிரிசை -
கிரியை. வழாஅ - வழுவாத. வரிசை - சிறப்புமாம். இதன்பால் - இத்திருமணத்தின் பால்.
முன் கூற்றமைத்து - முன்னுரை கூறி.
|