பக்கம் எண் :

பக்கம் எண்:395

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            வயந்தக குமரனு நயந்தது நன்றென
      30    இன்னொலிக் கழற்கான் மன்னனைக் குறுகிப்
            பொருத்தம் படவவ னுரைத்ததை யுணர்த்தலின்
 
            (வயந்தகன் தருசகன்பாற் சென்று கூறல்)
               29 - 31 : வயந்தக.........உணர்த்தலின்
 
(பொழிப்புரை) அப்பணி பெற்ற வயந்தக குமரனும், ''இறை மகனே! நீ விரும்பியது மிகவும் நன்று'' என்று உதயணனைப் பாராட்டிக் கூறி இனிய ஒலியினையுடைய வீரக்கழ லணிந்த காலையுடைய தருசகமன்னனின்பாற் சென்று உதயணன் கூறியதனை அம்மன்னன் நெஞ்சிற்கு நன்கு பொருந்தும்படி அறிவித்தலாலே; என்க.
 
(விளக்கம்) நயந்தது - இசைச்சனுக்கு மணம் புரிவிக்க வேண்டு மென்று விரும்பியது. மன்னன் : தருசகன். அவன் : உதயணன்.