உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
விருப்பொடு கேட்டு விறல்கெழு
வேந்தன்
நங்கை தோழி நலத்தொடு
புணர்ந்த அங்கலுழ்
பணைத்தோ ளாப்பியா யினியெனும்
35 செழுக்கயன் மழைக்கட் சேயிழை
யரிவை
ஒழுக்கினுங் குலத்தினும் விழுப்ப
மிக்கமை
சென்றுரை செம்மற் கென்றவ
னொருப்பட
வயந்தக குமரன் வந்து கூறத்
|
|
(தருசகன் யாப்பியாயினியை இசைச்சனுக்கு
மணம் செய்விப்பதாகச்
சொல்லி
விடுத்தல்)
32 - 38 : விருப்பொடு.........கூற
|
|
(பொழிப்புரை) வயந்தகன் கூறியதனை வெற்றி பொருந்திய அத்தருசக
மன்னன் ஆர்வத்தோடு கேட்டுப் பதுமாபதி நங்கையின் உசாஅத்துணைத் தோழியும், பெண்மை
நலத்தோடு கூடிய அழகொழுகுகின்ற பணைத்த தோளையுடைய யாப்பியாயினி என்னும் பெயருடையாளும்
வளவிய கயல்மீன் போன்ற குளிர்ந்த கண்களையும் சிவந்த அணிகலன்களையும் உடையவளாகிய
பார்ப்பனக் கன்னி ஒருத்தி உளள். அவள் நல்லொழுக்கத்தாலும், உயர்குடிப்பிறப்பினாலும்
மிகவும் சிறப்புடையளாவள். அவளை நும்மரசன் விரும்பியபடி இசைச்சனுக்கு மணம்
புரிவிப்பேம். இச்செய்தியை நீ சென்று நும்மரசனுக்கு உணர்த்துக! என்று கூறி அவ்வரசன்
உடன்படாநிற்ப, அச்செய்தியை வயந்தககுமரன் உதயணன்பால் வந்து கூறாநிற்றலாலே;
என்க.
|
|
(விளக்கம்) வேந்தன் - தருசகன். நங்கை தோழி -
பதுமாபதியின் உசாஅத்துணைத்தோழி. நலம் - பெண்மை நலம். அங்கலுழ் - அழகொழுகுகின்ற.
மழைக்கண் - குளிர்ந்த கண். அரிவை - கன்னி என்பதுபடநின்றது. விழுப்பம் - சிறப்பு.
செம்மல் - உதயணன். ஒருப்பட - உடன்பட; வந்து உதயணனுக்குக் கூற
என்க.
|