பக்கம் எண் :

பக்கம் எண்:397

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            தோழ ரெல்லாந் தோழிச்சி யாகத்
      40    தாழ்வ ளாமெனத் தாழாது வலிப்ப
            நன்னெறி யறியுநர் நாடெரிந் துரைப்பத்
 
             (உதயணன் முதலியோர் உடன்பாடு)
                39 - 41 : தோழர்.........உரைப்ப
 
(பொழிப்புரை) அது கேட்ட உருமண்ணுவா முதலிய தோழர்கள் ''நன்று நன்று, பதுமாபதி நங்கைக்கு இற்றை நாள் உசாஅத்துணைத்தோழியாக விருக்கின்ற அப்பார்ப்பனி பின்னரும் நம்முடைய கொடிக் கோசம்பி நகரத்தின் கண்ணும் அக்கோமகளுக்குத் தோழியாகவே இருப்பளல்லளோ'' என்று மகிழ்ந்து கூறி, ''காலந்தாழாமல் அங்ஙனமே செய்க!'' என்று துணிந்து கூறா நிற்ப, கோள்களின் வழிகளை அறியும் கணி மாந்தர் அத்திருமணத்திற்குரிய நல்ல நாளை ஆராய்ந்து கூறா நிற்ப; என்க.
 
(விளக்கம்) தோழர் - உருமண்ணுவா முதலியோர். தோழிச்சி - தோழி. தாழாது - காலம் தாழாமல். வலிப்ப - துணிந்து கூற, நன்னெறி - கோள்களி யங்கும் நல்ல வழி. நாள் - நல்லநாள்.