உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
பெருமூ
தாளரை விடுத்தலிற் கேட்டே
50 திருமா தேவியுந் தேன்புரை
தீஞ்சொற்
கணங்குழை மகளைக் காம
னனைய
வணங்குசிலைத் தடக்கை வத்தவர்
பெருமகற்
கெண்ணின னெனவே யுண்மலி
யுவகையள்
அதிநா கரிகத் தந்தணிக் கணியும்
55 முற்றணி கலங்கள் கொற்றவி
கொடுப்பப்
|
|
(இதுவுமது) 49
- 55 : கேட்டே.........கொடுப்ப
|
|
(பொழிப்புரை) தருசக மன்னனுடைய தாயாகிய அத்திருமா தேவியாரும்,
அச்சான்றோர் வாயிலாய்க் கேட்டறிந்து தேன் போன்ற இனிய மொழிக ளையும், வட்டமான
குழையினையும் உடைய பதுமாபதியைக் காமவேளை யொத்த வளைந்த வில்லையுடைய பெரிய
கையையுடைய வத்தவ மன்னனுக்குத் திருமணம் புணர்க்க நினைத்தனன் என்று கேட்டபொழுதே
உள்ளத்தின்கண் மேன்மேலும் பெருகாநின்ற உவகையையுடையளாய், மிக்க நாக ரீகத்தையுடைய
பார்ப்பனக் கன்னியாகிய யாப்பியாயினியை இசைச்சனுக்கு மணம் செய்விப்பதற்கும்
பெரிதும் உடன்பட்டவளாய் யாப்பியாயினி அணிதற்கு வேண்டிய பேரணிகலன்கள் பலவற்றையும்
அவ்வரசமா தேவி யார் வழங்கா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) திருமாதேவி : தருசகன் நற்றாய்.
தேன்புரை-தேனையொத்த. கணம் - வட்டம்; திரட்சியுமாம். மகள் : பதுமாபதி. அதி
நாகரீகத் தந்தணி - பெரிதும் கண்ணோட்டமுடைய பார்ப்பனியாகிய யாப்பியாயினி.
கொற்றவி - அரசமாதேவி.
|