பக்கம் எண் :

பக்கம் எண்:4

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
           இல்லெனக் கெழுபகை யிம்மையி னினியென
           மாற்று வேந்தன் மதில்காப் பிகந்துதன்
           ஆற்றன் மகிழ்ந்த வந்நிலை யொற்றி்
 
              (பாஞ்சால மன்னன் கருத்து)
               22 - 24;  இல்............ஒற்றி்
 
(பொழிப்புரை) இனி உதயணனின்பகைவேந்தனாகிய அந்த
  ஆருணி ''இப் பிறப்பின் கண்ணே இனி எனக்குப் பகையாகி
  வருபவர் இவ்வுலகத்தே யாண்டும் இலர்'' என்று கருதித் தன்
  வலிமையைத் தானே புகழ்ந்து பொச்சாப் புடையவனாய்
  அவ்வுவகை மகிழ்ச்சியிற் சோர்வுடையனாய் அரண்மனையைப்
  பாதுகாக்குஞ் செயலையும் கைவிட்டவனாக இருக்கின்ற அந்த
  நிலைமையினை. உதயணனுடைய மதியுடையமைச்சர்கள் (33)
  ஒற்றர் வாயிலாய் நன்குணர்ந்து கொண்டு என்க.
 
(விளக்கம்) எழுபகை: வினைத்தொகை. இம்மை-இப்பிறப்பு.
  மாற்றுவேந்தன்-பகைமன்னன்; ஆருணியரசன், தன் ஆற்றலைத்
  தானே வியந்து அவ்வியப்பினால் மகிழ்ந்த என்றவாறு. ''இறந்த
  வெகுளியிற்றீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு' என்னும்
  அருமைத் திருக்குறட்கு (531) இவ்வாருணி வேந்தன் எடுத்துக்காட்டாக
  அமைதனினைக. -அந்நிலை-அந்தப் பொச்சாப்புற்றநிலை உதயணன்
  அமைச்சர் ஒற்றரானொற்றி என்க.