உரை |
|
3. மகத காண்டம் |
|
3. இராசகிரியம் புக்க |
|
வாணுதன் மகளிரு மைந்தரு
மயங்கிக்
காம மென்னு மேமப்
பெருங்கடற்
படுதிரைப் பரப்பிற் குடைவன
ராடி
அணிதலும் புனைதலு முனிவில ராகிக்
55 காத லுள்ளமொடு கலந்துண்
டாடுநர்
போகச் சேரி புறவித ழாகச்
|
|
(பரத்தையர் தெரு) 51-56 ;
வாணுதல்.........புறவிதழாக
|
|
(பொழிப்புரை) இத அப்படைச்
சேரியாகிய பொய்கையின் கண்ணே ஒளியுடைய நெற்றியையுடைய இளமகளிரும்
இளமைந்தரும் ஒருவர்பால் ஒருவர் காமமுற்று மயங்கிக் காமம் என்கின்ற
இன்பப் பெருங்கடலிலே எழாநின்ற நினைவுகளாகிய அலைப்பரப்பிலே தம்
மனம்போல முழுகி விளையாடி தம்மை அணிந்து கொள்ளுதலினும்
சிறிதும் வெறுப்படையாராகி அன்புடைய நெஞ்சத்தோடே கலந்து நுகர்ந்து
விளையாடுவோர் இன்ப நுகர்தற்கிடனான பரத்தையர் சேரிகள் இராசகிரியம்
என்னும் அத்தலைநகராகிய தாமரை மலரினது புறவிதழ்களாகவும் என்க.
|
|
(விளக்கம்) படைச்சேரியாகிய பொய்கையின்கண் அமைந்துள்ளதொரு தாமரை. மலராக
இராசகிரியம் உருவகப்படுத்தப்படுகின்றது. அத்தாமரைமலர்க்குப்
பரத்தையர் சேரிகள் புறவிதழ்களாக என்க. ஏமம்.-இன்பம்.
திரைப்பரப்பென்றது நினைவலைகளை. அணிதல்-அணிகலன் அணிதலாம்.
புனைதல்-மலர் முதலியன புனைதலும் தொய்யில் எழுதுதலும் பிறவும் என்க,
போகச்சேரி-காமவின்ப நுகரும் பரத்தையர் சேரி,
|