உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
120 நினக்கு
மொக்குமஃ தெனக்கே
யன்றென மனத்தி
னன்னோண் மறுமொழி
கொடுப்பச்
சின்னகை முகத்த ணன்னுதல்
வாவென
நுகர்ச்சியி னுகந்த வனமுலை
நோவப்
புகற்சியொடு புல்லிப் புனையிழை கேண்மதி
|
|
(யாப்பியாயினி
கூறுதல்)
120 - 124 : நினக்கும்.........மதி
|
|
(பொழிப்புரை) அந்நகைமொழி கேட்ட அத்தோழி, ''கோமகளே !
அப்பழி எனக்குமட்டும் உரியதன்று; உனக்கும் ஒக்குமே'' என்று மறுமொழி கூறா நிற்ப,
அதுகேட்ட பதுமாபதி மகிழ்ந்து முறுவல்பூத்த முகத்தினளாய், ''நல்ல நுதலையுடையோய்! வருக!
வருக!'' என்று வரவேற்பாளாக, அப்பதுமாப தி யின் மனத்தையேயொத்த தோழியாகிய
அவ்வியாப்பியாயினி தன் கணவ னுடைய நுகர்ச்சி காரணமாகப் பூரித்துயர்ந்த தனது அழகிய
முலைகள் நோவும்படி அக்கோமகளை ஆர்வத்தோடு இறுகத் தழுவிக்கொண்டு, ''அணி கலனணிந்த
எங்கோமகளே கேட்டருள்க''; என்க.
|
|
(விளக்கம்) இவ்விருவரும் நிகழ்த்திய நகைமொழியும்
மறுமொழியும் பெரிதும் நகைச்சுவையுடையனவாதல் உணர்க. மனத்தினன்னோள் : பதுமா
பதியின் மனத்தையொத்த யாப்பியாயினி. முகத்தள் : பதுமாபதி. நன்னு தல் : விளி.
உகந்த - உயர்ந்த. புனையிழை : விளி. மதி :
முன்னிலையசை.
|