உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
125 வண்டார்
மார்பின் வடிநூல்
வயவனைக்
கண்டே னன்ன தன்மைய
னாகிக்
கள்ள வுருவொடு கரந்தகத்
தொடுங்கிநின்
உள்ளங் கொண்ட வுறுவரை
மார்பன்
வசையி னோன்றாள் வத்தவர் பெருமகன்
130 உதையண குமரன் போலு
முணர்கெனச்
சிதைபொரு ளில்லாச் சின்னெறிக்
கேண்மை
மணங்கமழ் மாதர் துணிந்தன ளுரைப்ப |
|
(இதுவுமது) 125
- 132 : வண்டார்.........உரைப்ப |
|
(பொழிப்புரை) ''வளவிய மாலையணிந்த மார்பினையுடைய
நூலாராய்ச்சியினையுடைய நின் கணவனாகிய மாணகனை யான் கண்டேன். அங்ஙனம் வஞ்சகமாகப்
பார்ப்பன வேடம் தரித்தவன் யார் தெரியுமா? அக் கள்ள வடிவத்தோடு நம் சிவிகையில்
மறைந்து நம் கன்னிமாடத்துக் கரந்து றைந்து உன்னுடைய நெஞ்சங்கவர்ந்த பெரிய
மலைபோன்ற மார்பினை யுடைய அம்மாணகன் உண்மையில் பழியற்ற வலிய முயற்சியினையு டைய
வத்தவ நாட்டு அரசனாகிய உதயண குமரனே காண் ; இவ்வுண்மையை நன்கு உணர்ந்துகொள்க !''
என்று பொய்ப்பொருள் மருவாத நல்ல சில வழிக ளையுடைய நட்புரிமையையுடைய நறுமணங்கமழும்
யாப்பியாயினி தெளிந்து கூறாநிற்ப; என்க. |
|
(விளக்கம்) வடிநூல் வயவன் - அழகிய பூணூலையுடைய வலியவனான
மாணகன் என்றும், வடித்த நூலையுடைய போர்மறவனாகிய உதயணனென்றும் இருபொருளும்
தோன்றுதலுணர்க. அன்ன தன்மையன் - அங்ஙனம் பார்ப்பன வேடங் கொண்டவன். கள்ள உருவு -
வஞ்சக வேடம். உறு வரை - பெரிய மலை. வசை - பழி. போலும் : ஒப்பில் போலி.
சிதைபொருள் - பொய்ப்பொருள். சின்னெறி - நல்லனவாகிய சில வழிகள். மாதர்
- யாப்பியாயினி. |