பக்கம் எண் :

பக்கம் எண்:412

உரை
 
3. மகத காண்டம்
 
22. பதுமாபதி வதுவை
 
            பின்னருங் காண்பா மன்ன னாகுதல்
      140    பொன்னே போற்றெனத் தன்மனைப் பெயர்ந்து
            நன்னுத னிலைமை யின்னதென் றுரைக்கவம்
 
                 (யாப்பியாயினியின் செயல்)
                139 - 141 : பின் ........... உரைக்க
 
(பொழிப்புரை) அதுகேட்ட யாப்பியாயினி அவளுடைய கலங்கிய நிலைமை கண்டு, 'கோமகளே! கலங்காதே கொள் ! இன்னுஞ் சிறிது பொறுத்துப் பார்ப்போம். அவன் அத்தன்மையன் ஆதலைத் திருமகள்போல்வாய் ஆற்றி இருந்திடுக'' என்று அவளை ஒருவாறு தேற்றி அவள்பால் விடைபெற்றுத் தனது திருமண இல்லத்திற்கு மீண்டுவந்து பதுமாபதியின் நிலைமை இங்ஙனமிருக்கின்றது என்று உதயணனுக்குக் கூறாநிற்ப ; என்க.
 
(விளக்கம்) இதன்கண் பின்னருங் காண்போம். அவன் அன்னனா தல் என்னும் இம்மொழி பெருமகன் தணத்தல் தகுமோ என்னும் பதுமா பதியின் வினாவிற்கு விடையாகவும் தன் கூற்றிற்கு அவன் உதயணனே யாதலைப் பின்னருங் காண்போம் எனப் பொருள்பட்டு ஆக்கமாகவும் அமைதல் காண்க. தன்மனை என்றது, திருமண வில்லத்தை. நன்னுதல் : பதுமாபதி. உதயணனுக்கு உரைக்க என்க.