உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
வல்லோன் வகுத்த நல்வினைக்
கூட்டத்
தியவனப் பேழையு ளடைந்தோ
ரேந்திய
தமனியப் பல்கலந் தளிரியன் மாதர்
215 ஆற்றுந் தகையன வாற்றுளி
வாங்கி
வெண்சாந்து வரித்த வஞ்சி
லாகத்
திணைமுலை யிடைப்பட் டிலங்குபு
பிறழும்
துணைமலர்ப் பொற்கொடி துளங்கு
நுசுப்பினை
நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப
220 மேற்பாற் பிறையென விளங்க
வமைந்த
தொருகா ழார மொளிபெற வணிந்து |
|
(இதுவுமது)
212 - 221 : வல்லோன்.........அணிந்து |
|
(பொழிப்புரை) தொழில் வல்லவன் இயற்றிய நல்ல
தொழிற்றிறங்கள் கூடிய யவன நாட்டுப் பேழையுள் வைத்துத் தோழிமார்கள் கையேந்திக்
கொணர்ந்த பொன்னணிகலன் பலவற்றுள்ளும் மாந்தளிர் போன்ற நிற முடைய அப்பதுமாபதி
பொறுக்கும் இயல் புடையனவாகிய மெல்லணிக லன்களை முறையே தேர்ந்தெடுத்து வெள்ளைச்
சந்தனத்தால் கோலம் எழு திய அழகிய மார்பின்கண் இரண்டு முலைகளின் இடையிலும் கிடந்து
பிறழ்ந்து விளங்கும் இரட்டை மலர்ப் பிணையல் போன்று இயற்றிய பொற்கொடிகளாலே
அசையும் இடையை அசையாமல் நிலை பெறும்படி கட்டு வது போலப் பூட்டி மேற்றிசையில்
தோன்றும் இளம்பிறை போல விளங்கும்படி அமைந்த ஒற்றைவடமாகிய முத்து மாலை புத்தொளி
பெறும்படி அணிந்து; என்க. |
|
(விளக்கம்) வல்லோன் - தொழில் வல்லோன். யவனப் பேழை -
யவன நாட்டுப் பெட்டி. தமனியக்கலம் - பொன்னணிகலம். ஆற்றும் - பொறுக்கும்.
வரித்த - கோலஞ் செய்த. இலங்குபு - இலங்கி. விசிப்பது போல - கட்டுவது போல. ஒரு
காழாரம் - ஒற்றை வடமாகிய முத்து மாலை. |