உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
ஓங்கிய பெரும்புக ழுதயண குமரனைத் 240
தாங்கருந் தோழர் தாம்புனைந்
தணியக்
கடிநாட் கோலத்துக் காம
னிவனென
நெடுநகர் மாந்தர் நெஞ்சந்
தெளியக்
காட்சிக் கமைந்த மாட்சி யெய்த |
|
(உதயணனைக்
கோலஞ்
செய்தல்)
239 - 243 : ஓங்கிய.........எய்த |
|
(பொழிப்புரை) இனி, உயர்ந்த பெரிய புகழையுடைய உதயண குமரனையும்
அவனுடைய தோழர்கள் தம்முடைய ஒப்பனைத் திறத்தினாலே அணிசெய்து அழகின்மேல் அழகு
செய்யாநிற்றலால் அவனைக் கண்ட மாந்தர்கள் மணக் கோலஞ் செய்து கொண்ட காமவேளே
இவன் என்று துணியும்படி காட்சிக்குப் பொருந்திய மாட்சிமையுடையானாக;
என்க. |
|
(விளக்கம்) தோழர் - வயந்தகன் முதலியோர்.
கடிநாட்கோலத்துக் காமன் - திருமணக் கோலத்தோடு தோன்றிய
காமவேள். |