உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
வெற்ற
வேந்தன் கொற்றப் பெருங்கணி
245 கூறிய முழுத்தங் குன்றுத
லின்றி
ஆர்வச் செய்தொழி லகன்பெருங்
கோயிலுள்
ஆயிரம் பொற்றூ ணணிமணிப்
போதிகைக்
காய்கதிர் முத்தங் கவினிய
வணிமின்
அத்தூ ணடுவ ணொத்த வுருவின
250 சந்தனப் பெருந்தூ ணொன்பது
நாட்டிய மைந்த
ரழகிற் கேற்ற ... ... ...
...
... ... ... ... ... ... ... ...
...
அழன்மணி நெடுமுடி யரசரு
ளரசன்
நிலமமர் செங்கோ னித்தில
மேர்தரத்
தலைமலை படலைத் தருசகன் புகுந்து
255 தீவேள் சாலை திறத்துளி
மூட்டிப்
புகுதுக வத்தவ னென்றலிற்
பூந்தார்
அரசிளங் குமரரொ டண்ணல் புகுதரக் |
|
(உதயணன்
மணமண்டபம்
புகுதல்)
244 - 257 : வெற்ற.........புகுதர |
|
(பொழிப்புரை) வெற்றியையுடைய தருசக மன்னனுடைய தன் தொழிலிலே
வெற்றிமிக்க பெரிய கணிமகன் ஆராய்ந்து கூறிய முழுத்தங் குறையாதபடி ஆர்வத்தோடு
அணிசெய்த தொழிலையுடைய அகன்ற பெரிய அரண்மனை யின்கண் உள்ள ஆயிரம்
பொற்றூண்களையும் அழகிய மணிகள் பதித்த போதிகைகளையும் காய்கின்ற கதிரையுடைய
முத்துக்குஞ்சங்களாலே அழகுற அணி செய்யுங்கோள்! என்றும் அத்தூண்களினிடையே தம்முள்
ஒத்த உருவினையுடைய ஒன்பது சந்தன மரத்தாலியன்ற பெரிய தூண்களை நாட்டுங்கோள் !
அங்ஙனம் நாட்டிய இளைஞர் அழகிற்குப் பொருந் திய
.................... சுடரும் மணிபதித்த நெடிய முடியினையுடைய அரசருள் வைத்துச் சிறந்த
அரசனாகிய அத்தருசக மன்னன் உலகம் விரும்பும் தனது செங்கோலின்கண் அமைத்த முத்துக்கள்
அழகுதரவும் தனது தலையின்கண் சூட்டிய படலை மாலையையுடையனாய் அம் மணிமண்டபத்தின்கண்
வந்து புகுந்து வேள்விச்சாலையின்கண் முறைப்படி தீமூட்டுவித்து ''இனி வத்தவ மன்னனாகிய
உதயணகுமரன் இத்திருமணமண்டபத்தில் எழுந்தரு ளுக!'' என்று கூறுதலாலே அழகிய
மலர்மாலையணிந்த வேறு சில அரசிளங்குமரர்களோடு தலைமைத் தன்மையுடைய அவ்வுதயணன்
திருமணமண்டபத்திற் புகாநிற்ப என்க. |
|
(விளக்கம்) வெற்றம் - வெற்றி. அரசனுடைய கணியைப்
பெருங்கணி என்றல் மரபு. ''ஆசான் பெருங்கணி அருந்திற லமைச்சர்'' என்றார்
இளங்கோவடிகளாரும். முழுத்தம் - முகூர்த்தம். இது மூழ்த்தம் எனவும் வழங்கும்.
இப்பகுதியில் 251-ஆம் அடியின் இறுதிப் பகுதியும் அதனையடுத்த அடி முழுவதும் கிடைத்தில.
அதனால் பொருள் விளக்கம் இல்லை. நிலம் : ஆகுபெயர் : மக்கள் தலையில் மலைந்த
படலையையு டைய தருசகன் என்க. வேள் - வேட்கின்ற. அண்ணல் :
உதயணன். |