உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
கதிர்மதி முகத்தியைக் காவல்
கண்ணி
ஆயிரத் தெண்மர் பாங்கிய ரன்னோர்
260 பாசிழைத் தோழியர் பாடகஞ்
சுடரத்
தண்பெரும் பந்தருட் கண்பிணி
கொள்ள
உயர்வினு மொழுக்கினு மொத்தவழி
வந்த
மங்கல மன்னற்கு மந்திர
விழுநெறி
ஆசான் முன்னின் றமையக் கூட்டித்
265 தீமாண் புற்ற திருத்தகு பொழுதிற் |
|
(பதுமாபதி
வருகை)
258 - 265 : கதிர்.........பொழுதில் |
|
(பொழிப்புரை) ஒளியுடைய திங்கள் போன்ற முகத்தையுடைய பதுமாபதி
யைப் பாதுகாத்தலைக் கருதிப் பக்கத்தே நிற்போரும் பண்பினாலே தோழியரை ஒத்தவரும்
ஆகிய ஆயிரத்தெட்டுக் காவன்மகளிரும், பசிய அணிகலன்களையுடைய பிற தோழிமார்களும்
பதுமாபதியின் பாடகம் சுடர் வீசும்படி குளிர்ந்த பெரிய மணப்பந்தலில் உள்ள மாந்தருடைய
கண்களைப் பிணித்துக் கொள்ளும்படி அழைத்துவந்து உயர்குடிப் பிறப்பா லும்,
ஒழுக்கத்தாலும் ஒத்த வழியிலேயே வந்த ஆக்கமுடைய அவ்வுத யண மன்னனுக்கு வேள்வியாசான்
மந்திரத்தையுடைய சிறந்த நெறி யினை முன்னின்று காட்ட அவனோடு அப்பதுமாபதி
பொருந்தும்படி கூட்டி வைப்ப, வேள்வித்தீ மாட்சிமையுற்ற அழகிய அம்மணப்
பொழுதின்கண்; என்க. |
|
(விளக்கம்) முகத்தி : பதுமாபதி. காவல்கண்ணி - காத்தலைக்
கருதி. பாங்கியரன்னோராகிய ஆயிரத்தெண்மர் என்க. ஆயிரத்தெண்மரும் தோழியரும் சுடர
- கொள்ள, கூட்டி என்க. ஆசான் - முன்னின்று கூட்டக்கூட்டி என்க. தீ -
வேள்வித்தீ. |