உரை |
|
3. மகத காண்டம் |
|
22. பதுமாபதி வதுவை |
|
ஏதமில் காட்சி யேயர்
பெருமகன்
நன்னுதன் மாதரை நாட்கடிச்
செந்தீ
முன்முத லிரீஇ முறைமையிற்
றிரியா
விழுத்தகு வேள்வி யொழுக்கிய லோம்பிச்
275 செம்பொற் பட்டம் பைந்தொடிப்
பாவை
மதிமுகஞ் சுடர மன்னவன்
சூட்டித்
திருமணிப் பந்தருட் டிருக்கடங் கழிப்பி
|
|
(உதயணன் பதுமாபதியை
மணம்புரிந்துகொள்ளல்)
271 - 277 : ஏதம்........கழிப்பி
|
|
(பொழிப்புரை) நற்காட்சியையுடைய ஏயர்குலத் தோன்றலாகிய உதயண
மன்னன் நல்ல நெற்றியையுடைய அப்பதுமாபதியை அத்திருமண வேள்விச் செந்தீமுன்னிலையிலே
அமர்த்தி மறை விதி முறைமையில் பிறழாமல் சிறப்புடைய அவ்வேள்வியின்கண்
செய்தற்குரிய சடங்குகளை யெல்லாம் பேணிச் செய்து முடித்துச் செம்பொன்னாலியன்ற
பட்டத்தினைப் பசிய தொடியையுடைய அப்பதுமாபதியினது திங்கள் போன்ற திருமுகம் பின்ன
ரும் ஒளி பெறும்படி சூட்டி அழகிய மணிகளால் அணி செய்யப்பட்ட அத்திருமணப் பந்தலிலே
செய்தற்குரிய ஏனைய அழகிய சடங்குகளையும் செய்து முடித்து;
என்க.
|
|
(விளக்கம்) ஏதமில் காட்சி - குற்றமற்ற நற்காட்சி. மாதரை
: பதுமாப தியை. கடிநாட்சந்தி என மாறுக. முன்முதல் - முன்னிடத்தே. வேள்வி -
மணவேள்வி. ஒழுக்கியல்-கரணவகைகள், பட்டம் சூட்டுதல் ஒரு சடங்கு
என்க.
|