உரை |
|
3. மகத காண்டம் |
|
3. இராசகிரியம் புக்க |
|
மேன்முறை யியன்ற நான்மறைப் பெருங்கடல்
80 வண்டுறை யெல்லை கண்டுகரை
போகிப்
புறப்பொரு ளல்லா வறப்பொரு
ணாவின்
ஒளிகண் கூடிய நளிமதி
போல
ஓத்தொடு புணர்ந்த காப்புடை
யொழுக்கின்
உலகப் பல்லுயிர்க் கலகை யாகிப்
85 பெருந்தகை வேள்வி யருந்தவப்
படிவமொடு
தந்தொழி றிரியாத் தரும
நெஞ்சின்
அந்தணர் சேரி யகவித ழாக |
|
(அந்தணர் தெரு) 79-87:
மேன்முறை.........அகவிதழாக |
|
(பொழிப்புரை) மலான
ஒழுக்கமுறைமையாலே இயன்ற நான்கு மறைகளாகிய பெரிய கடல்களின் வளவிய
துறையிற் பயின்று அவற்றின் எல்லைகளைக் கண்டு கரையேறிப்
புறப்பொருளாகிய பொய்ப்பொருள்களின் வேறாகிய உட்பொருளைப்
பயின்றுணர்ந்த நாவினோடும் ஒளியுடைய இடமாகிய கலைகள் முழுதும் நிறைவுபெற்ற
குளிர்ந்த திங்கண் மண்டிலம்போலே மறையோடு பொருந்திய
பொறிகளைக் காக்கின்ற காவலமைந்த ஒழுக்கத்தோடும் உலகத்தே வாழாநின்ற
பலவாகிய உயிர்கட்கும் தாமே மேல்வரம்பாகிப் பெரிய
தகுதியையுடைய வேள்வி செய்தலோடே தவவேடமுந் தாங்கித் தமக்கு மறைகூறிய
அறுவகைத் தொழிலினின்றும் பிறழாத அறமுடைய திண்ணிய நெஞ்சத்தோடும் கூடிய
பார்ப்பனருடைய தெருக்கள் அந்த நல்லிதழுக்கும் அகத்தே பொருந்திய
அகவிதழாகவும் என்க, |
|
(விளக்கம்) வண்டுறை-வளமுடைய
துறை. நான்மறைப்பெருங்கடல் துறை எல்லைகண்டு கரைபோகி என்றது
நான்கு வேதங்களையும் கடைபோக ஐயந்திரிபறப் பயின்று முதிர்ந்து என்றவாறு.
கலைநிறைதலின் கலைநிரம்பிய மதி உவமமாயிற்று. ஓத்து நூல்.
காப்பு-பொறியடக்கம். தந்தொழில் என்றது ஓதல் ஓதுவித்தல்
வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும்
இவ்வாறுமாம். தருமம் எவ்வுயிர்க்குஞ் செந்தண்மைபூண்டொழுகும் அருளறம்
என்க, |