உரை |
|
3. மகத காண்டம் |
|
23. படையெழுச்சி |
|
மன்ன
குமரனொடு செல்கெனச் செப்பாச்
செயற்படு கரும மெல்லா
மற்றவற்
கியற்பட வீவலென் றமைச்சரொடு
கிளந்து
வேறுவே றாகத் தேறக் காட்டி
45 நினக்கே யவனை நிறுத்துதல்
கடனென
|
|
(இதுவுமது)
41 - 45 : மன்ன.........கடனென
|
|
(பொழிப்புரை) நீவிரெல்லாம் இறைமகனாகிய இவ்வுதயணனோடு செல்வீராக!
என்று சொல்லி, ''அவ்வுதயணனுக்கு யான் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் யான்
இயல்பாகவே செய்வேன்'' என்று அவ்வமைச்சருக்குக்கூறி அவ்வமைச்சர்களைத் தனித்தனியே
கண்டு அவர் தெளியும்படி கூறிக் காட்டி, அவ்வுதயணனை மீண்டும் நிலைநிறுத்துதல் நினக்கே
கடன் என்று ஒவ்வொருவருக்குந் தனித்தனியே கூறி; என்க.
|
|
(விளக்கம்) மன்ன குமரன் : உதயணன், செயல்படுதற்குரிய கருமம்
என்க. கிளந்து - சொல்லி.
|