உரை |
|
3. மகத காண்டம் |
|
23. படையெழுச்சி |
|
அவர்க்கே
யவர்க்கே யருளுரை யளைஇ
வடுத்தொழி லகன்ற வருட
கார
உடற்றுநர்க் கடந்த வுதயண
குமரன்
அடைக்கல நினக்கென வவன்வயிற்
கையடுத் 50 தோம்படைக் கிளவி
பாங்குறப் பயிற்றி
நிலைமை யறிய நீட்ட
மின்றி
மறைபுறப் படாமை மனத்தே யடக்கி
|
|
(தருசகன்
கூற்று) 46
- 52: அவர்க்கே..........அடக்கி
|
|
(பொழிப்புரை) ஒவ்வோர் அமைச்சர்க்கும் அருளுரை வழங்கி அவருள்ளும்
பழித்தொழிலில்லாத வருடகாரனை நோக்கி, ''அன்பனே! தன் பகைவரையெல்லாம் வென்று
கடந்த உதயணகுமரன் நினக்கே அடைக்கலங்காண்!'' என்று அவ்வருடகாரன் கையில் ஒப்புவித்து
ஓம்படைக்கிளவியும் அழகுறப் பலகாலும் சொல்லிப் பின்னரும், அந்நால்வரையும்
ஒருங்கேவைத்து ''அன்புடையீர்! பகையரசனின் நிலைமையை அறியும்பொருட்டுக்
காலந்தாழ்த்திருத்தலன்றியும், நம்முடைய மறைச் செய்திகள் வெளிப்படாதபடி
மனத்தின்கண் அடக்கி வைத்துக்கொண்டு; என்க.
|
|
(விளக்கம்) அவர்க்கே அவர்க்கே - அவ்வவ்வமைச்சர்க்கு.
உடற்றுனர் - பகைவர். அவன் வயின் - அவ்வருடகாரன் கையில். ஓம்படைக் கிளவி -
பாதுகாப்புச் சொல். நிலைமை - பகைவன்
நிலைமை.
|