(பொழிப்புரை) மன்னன் மொழிகள் எல்லாம் அங்ஙனமே செய்ய
வேண்டுமென்று தம் மனத்தை விரும்புவிக்கக் கூற்றுவனையொத்த அவ்வமைச்சர் ''பெருமானுக்கு
வெற்றியுண்டாகுக'' என்று கூறாநிற்றலாலே உயர்ந்த தோற்றத்தையுடைய உதயணனைச் சூழ்ந்து
கொண்டு அம்மகத நாட்டுப் பெரும்படை செழிப்புடைய கோசம்பி நகரத்திற்கு நேர் முகமாக
நோக்கி நள்ளிரவிலே எழுந்து சென்றது; என்க.
(விளக்கம்) புகற்ற - விரும்புவிக்க. கூற்றியல் தகையர் -
அரசன் கூறியவற்றிலே மனமும் செவியும் சென்ற தன்மையுடையர் என்றுமாம். தழீஇ - சூழ்ந்து
கொண்டு.