பக்கம் எண் :

பக்கம் எண்:444

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           விட்டன னிருந்த காலை யொட்டிய
           எழுச்சி வேண்டி யூகி விட்ட
           அருமறை யோலை யாய்ந்தன னடக்கி
     50    வரிமலர்ப் படலை வயந்தக னுரைக்கும்
 
         (தம்பியருடைய வரவை வயந்தகன் கூறல்)
              47 - 50 : ஒட்டிய.........உரைக்கும்
 
(பொழிப்புரை) தன்னோடு தொடர்புள்ள இப்படையெழுச்சியை விரும்பிய யூகி, விடுத்த அறிதற்கரிய மறையினையுடைய ஓலையை வயந்தகன் ஆராய்ந்துணர்ந்து தன்னுள் அடக்கிக் கொண்டு அழகிய மலர்விரவிய படலை மாலையையுடைய அவ்வயந்தகன் உதயணனுக்குக் கூறுவான்; என்க.
 
(விளக்கம்) ஒட்டிய - தொடர்புடைய. எழுச்சியை விரும்பி என்க. அருமறை - அறிதற்கரிய மறைச்செய்தி. படலை - ஒருவகை மாலை.