பக்கம் எண் :

பக்கம் எண்:446

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           ஆரர ணகர மாண்டன னொழுகும்
           ஆருணி யரசன் வார்பிணி முரசம்
           நிலனுட னதிர நெருப்பிற் காய்ந்து
           தலமுதற் கெடுநோய் தரித்த லாற்றார்
     65    போந்தனர் போலும் புரவல மற்றுநம்
           ஓங்கிய பெருங்குல முயர்தற் குரித்தென்
           றாங்கவ னுரைப்ப வமர்படக் கடந்த
 
                   (இதுவுமது)
           61 - 67 : ஆரரண்.........உரைப்ப
 
(பொழிப்புரை) ''பகைவர் கடத்தற்கரிய கோசம்பி நகரத்தைக் கைப்பற்றி ஆட்சிசெய்யாநின்ற அந்த ஆருணி மன்னன் வாராற் பிணிக்கப்பட்ட வெற்றிமுரசம் தமது நாடு முழுவதும் அதிரும்படி முழங்குதல் கேட்டு நின்தம்பியர் நெருப்பெனச் சினந்து தம் நாட்டினை இழந்ததனா லுண்டாகிய துன்பத்தைப் பொறாதவராய் அவ்வாருணி மன்னனோடு யாம் போரிடுதற்குப் புறப்பட்ட செய்தியுணர்ந்து அம்மன்னனை வெல்லுதற் பொருட்டு நமக்குத் துணையாகி வந்தனர்போலும், வேந்தே! இச்செயல் நம்முடைய உயர்ந்த பெரிய குலம் மேலும் உயர்தற்குரிய செயலாகும்'' என்று அவ்வமைச்சன் கூற; என்க.
 
(விளக்கம்) ஆரரண் - பகைவர் கடத்தற்கரிய அரண், அரசர்கள் தங்கள் வெற்றியை மக்களுக்கு உணர்த்துவதற்கு வெற்றி முரசத்தை எங்கும் முழக்குவிப்பது மரபு. தலமுதற்கெடுநோய் - நிலத்தை இழந்த துன்பம்.