உரை |
|
3. மகத காண்டம் |
|
24. மேல்வீழ் வலித்தது |
|
றாங்கவ னுரைப்ப வமர்படக்
கடந்த
தடக்கை கூட்டித் தாங்கா
வுவகையொடு
படைப்பெரு வேந்தன் பல்லூழ்
புல்லி 70 இருவயி னுலக மியையப்
பெற்ற
பெருமகன் போல வுவகையுட்
கெழுமிப்
பொருமுர ணண்ணல் புகன்ற பொழுதிற்
|
|
(உதயணன்
செயல்) 67
- 72 : அமர்.........பொழுதின் |
|
(பொழிப்புரை) தன்பகைவர் போர்க்களத்தே படும்படி கொன்று வெற்றி
எய்திய தன் பெரிய கைகளைச் சேர்த்துத் தாங்க ஒண்ணாத மகிழ்ச்சியோடு அப்படைப்
பெருவேந்தன் பன்முறையும் தழுவிக்கொண்டு இம்மை மறுமை என்னும் ஈரிடத்தும் பெறும்
இன்பத்தை இங்கு ஒரு சேரப்பெற்ற ஒருவனைப்போல மகிழ்ச்சியால் நிரம்பிப் போராற்றல்
மிக்க அவ்வண்ணல் தம்பியர் வரவினைப் பெரிதும் விரும்பும் பொழுதில்,
என்க. |
|
(விளக்கம்) தாங்கா உவகை - பொறுக்கொணாத மகிழ்ச்சி.
பல்லூழ் - பன்முறையும், இருவயினுலகம் - நிலவுலகமும் மேனிலையுலகமும். அண்ணல் :
உதயணன். |