பக்கம் எண் :

பக்கம் எண்:448

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           பாடுபெறு சிறப்பிற் பைந்தார் மன்னன்
           சேடுபடு வத்தஞ் சேர்வது பொருளென
     75    அறியக் கூறிய குறிவயிற் றிரியார்
           முன்னீ ராயினு மகந்துடன் புகுவோர்
           பன்னீ ராயிரம் படைத்தொழி லிளையரொ
           டற்றக் காலைக் கமைக்கப் பட்ட
           கொற்றத் தானையுங் குழூஉக்கொண் டீண்டத்
 
                   (படைகள் ஈண்டுதல்)
                  73 - 79 : பாடு.........ஈண்ட
 
(பொழிப்புரை) பெருமையும் சிறப்புமுடைய பசிய மாலையையணிந்த உதயண மன்னனுடைய பெருமைமிக்க வத்தவநாட்டினையடைவது எங்கள் குறிக்கோள் என்று தம் தலைவர் அறிவித்த குறிக்கோளினின்றும் மாறுபடாராய்க் கடலே யாயினும் அதன் நீர் முழுவதனையும் ஒருங்கே முகந்து கொண்டுவரும் ஆற்றலுடையோரும், பன்னீராயிரவரும், படைத்தொழிற் பயிற்சிமிக்க வரும் சோர்வுற்ற காலத்தில் உதவுதற்கு என்று அமைக்கப் பட்டவருமாகிய வெற்றியுடைய காலாண் மறவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேராநிற்ப ; என்க.
 
(விளக்கம்) பாடு - பெருமை. சேடு - பெருமை. வத்தம் - வத்தவநாடு. முன்னீர் - கடல். அற்றைக்காலை - சோர்வுற்ற பொழுது.