பக்கம் எண்:461
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 24. மேல்வீழ் வலித்தது | |
175
விசைப்புள் வெங்குர லிசைப்பக்
கேட்ட
நாகப் பெதும்பையி னடுங்கி
யாகத் துத்தியுந்
தொடரு முத்தொடு புரள
ஒளிக்கா சொருபாற் றோன்றத்
துயிற்பதத்
தசைந்த வந்துகில் கையகத் தசைய
180 நெகிழ்ந்த நீரிற் கண்கை
யாக
முகிழ்ந்த முலைமுதன் முற்றத்
தியைந்த தருப்பை
பொற்கொடி யாக
விரக்கமொ
டோருயிர்க் கணவற்கு நீருகுப்
பனள்போல்
முகங்கொள் காரிகை மயங்கல்
கூராச்
| |
(இதுவுமது)
175 - 184 :
விசைப்புள்.........கூரா | | (பொழிப்புரை) விரைந்து பறக்கும் இயல்புடைய கருடன்
வெவ்விய தனது குரலாலே ஆரவாரியாநிற்ப அது கேட்ட நாக கன்னிகை நடுங்குதல் போன்று
நடுங்கித் தன்னுடம்பி லணிந்திருந்த உத்தியும், சங்கிலியும் முத்துமாலையோடு
புரளாநிற்பவும், ஒருபக்கத்தே ஒளியுடைய மணிமாலை தோன்றாநிற்பவும், துயிலுதலையுடைய
காலத்தே தீ நிமித்தமாகத் தன்னிடையிலே உடுத்திய அழகிய ஆடை நெகிழ்ந்து தனதொரு
கையினிடத்தே அசையாநிற்பவும், தன் கண்ணே கையாகவும், தன் குவிந்த முலையின் முற்றத்தே
பொருந்திய பொற் கொடியே தருப்பையாகவும், அழுகையோடே தன்னொடுயிரொன்றாகிய தன்
கணவனுக்கு நெஞ்சம்நெகிழ்ந்து வெளிப்பட்ட தன் கண்ணீரே நீராகவும் உகுப்பவள்போலப்
பட்டத்துத் தேவியாகிய அக்காரிகை பெரிதும் மயங்காநிற்ப
என்க. | | (விளக்கம்) விசைப்புள் - கருடன். நாகப் பெதும்பை - நாக கன்னிகை.
உத்தி, தொடர், முத்து இவைகள் அணிகலன்கள். காசு - மணி. துயிற்பதம் - உறங்கும்
பொழுது. அசைந்த : அசைத்த - கட்டிய. முகிழ்ந்த - குவிந்த. பொற்கொடி - ஓரணிகலன்.
முகங்கொள் காரிகை - தலைமைத் தன்மை கொண்ட அழகுடைய நங்கை; பட்டத் தேவிக்குப்
பின் வருந் தீங்குக்கு நிமித்தமாக இங்ஙனம் அத்தேவி துயிலும்பொழுது நிகழும் என்று
வருடகாரன் கூறுகின்றான் என்க. |
|
|