உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
வளைத்தனர் கொள்வது
வலித்தன ரிருந்துழி
ஒளித்தகத் தொடுங்கிய வொற்ற
ரோடிச்
சிலைப்பொறித் தடக்கையிற் சேதியர்
பெருமகற்
கிசைத்தனர் புக்குநின் றேத்தினர் கூறுவர்
|
|
(ஒற்றர்
வரவு) 1
- 4 : வளைத்தனர்...................கூறுவர்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு உதயணனும் அமைச்சரும் தம்முட் கூடி ஆராய்ந்து ஆருணியரசன்
அரண்மனையை முற்றுகையிடத் துணிந்திருந்த பொழுது, அப்பகையரசன் அரண்மனைக்குட்
கரந்துறைந்து ஆங்கறிய வேண்டியவற்றை அறிந்து கொண்ட ஒற்றர்கள் விரைந்து சென்று தம்
வருகையை விற்றழும்பு கிடந்த பெரிய கையையுடைய உதயண மன்னனுக்கு வாயிலோர் வாயிலாய்
உணர்த்தி அப்பெருமகன் கட்டளை பெற்றபின்னர் அவன் திருமுன் சென்று வணங்கித் தொழுது
நின்று கூறுவர் என்க.
|
|
(விளக்கம்) ஆருணியரசன் அரண்மனையின்கண் ஒளித்து இருந்த ஒற்றர் என்க. ஒற்றர்
: உதயணன் ஒற்றர். சிலைப்பொறி - விற்றழும்பு. சேதியர் பெருமகன் : உதயணன். தம்
வரவைஇசைத்துப் புக்கு என்க.
|