உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
குறும்புழை யெல்லாங் கூடெழுக்
கொளீஇச் செறிந்த
பல்படை யறிந்தவ ணடக்கி
வாயின் மாடமொடு நாயி லுள்வழி
15 இரவும் பகலு மிகழாக்
காப்பொடு முரவுந்
தூம்பு முழங்குபு துவைப்ப
|
|
(இதுவுமது)
12
- 16 : குறும்புழை.........துவைப்ப
|
|
(பொழிப்புரை) ''குறும்புழைகட்கிடையே சுவர் எழுப்பிக் கூட்டி நிரம்பிய பலவாகிய
படைக்கலன்களை யெல்லாம் ஆராய்ந்து அவ்விடங்களிலே அடக்கி வைத்துக் கோபுரவாயிலும்
ஞாயிலும் இருக்குமிடமெல்லாம் இரவும் பகலும் விழிப்புடைய காவலர்களை அமைத்து வைத்து
முரசும் பெருவங்கியமும் முழங்கி ஆரவாரியாநிற்ப; என்க.
|
|
(விளக்கம்) குறும்புழை - சிறுவாயில். கூடு - இடைவெளியை மறைத்துக் கூட்டும் சுவர்.
பல்படை - பல்வேறு படைக்கலம். வாயின் மாடம் - கோபுரம். முரவு - முரசு. தூம்பு -
பெருவங்கியம். துவைப்ப - ஆரவாரிப்ப.
|