பக்கம் எண் :

பக்கம் எண்:47

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்க
 
         
           சாரச் சென்றதன் சீர்கெழு செல்வமும்
           விள்ளா விழுச்சீர்  விச்சா தரருறை
           வெள்ளியம் பெருமலை யன்ன விளங்கொளி
     120    மாட மறுகின் மயங்கொளிக் கழுமலும்
           நீடுபுகழ்க் குருசி னெஞ்சிடை நலிய
           வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தைை
           உள்ளுபு திருநகர் புக்கன னுலந்தென.
 
        (உதயணன் இராசகிரியம் புகுதல்)
         117-123 ; அதன்............உலந்தென்
 
(பொழிப்புரை) அவ்விராசகிரிய நகரத்தின் சிறப்புடைய
  செல்வப் பெருக்கமும், வேறுபடாத மாபெருஞ் சிறப்புடைய
  விச்சாதரர் வருகின்றவெள்ளி மாமலைபோன்று விளங்கும்
  ஒளியையுடைய மாடங்களையுடைய தெருக்களிலே பொருந்திய
  ஒளிப்பெருக்கமும் நீண்ட புகழையுடைய உதயண மன்னனுடைய
  நெஞ்சினை வருத்தாநிற்ப மேலும் தன் காதலியாகிய பெரிய
  மலர்மாலையணிந்த வாசவதத்தை நல்லாளையும் நினைந்து
  நினைந்து மெலிந்து அச்செல்வமா நகரினூடே புகுந்தனன் என்க.
 
(விளக்கம்) விச்சாதரர் வெள்ளிமலையில் வாழ்வோர்
  என்பது சைன நூற்றுணிபு. கழுமல்-பெருக்கம். அரசனாகலின் வேறோர்
  அரசன் செல்வப் பெருக்கமும் அவர் நகர்ச் சிறப்பும் மனத்தை நலிந்தன
  என்பது கருத்து. உள்ளுபு-நினைந்து, உலந்துபுக்கனன் என்க.

             3.  இராசகிரியம் புக்கது முற்றிற்று.
  -----------------------------------------------------------------------------