உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
வாங்குசிலைத்
தடக்கை வருட காரற்
கோங்குபுகழ் வென்றி யுதயண னிசைக்கும்
60 நின்னொ டென்னிடை நீப்பிவ
ணுண்டெனத்
துன்னிய நமர்கட்குத் தோன்றக்
கூறி
அவற்குப்பாங் காகிய வார்வல
ருளரெனின்
மிகச்செறி வுடையையாய் விடுமதி
விடூஉம்
மாற்றந் தன்னையு மோர்த்தனை கொண்மோ
|
|
(இதுவுமது) 57
- 64 : வேண்டா.........கொண்மோ
|
|
(பொழிப்புரை) ''ஆதலாலே அவ்வாறு நாம் ஆருணியரண்மனையை இரவிற் சூழ்ந்து கொண்டு
போராற்றல் வேண்டாவாம். இவ்விடத்தே மீண்டும் யான் கூறுமிச்செய்தியைக் கூர்ந்து
கேட்கக் கடவை காண்!'' என்று கூறி வளைந்த விற்படையேந்திய அவ்வருடகாரனுக்கு உயர்ந்த
புகழையுடைய வெற்றியையுடைய அவ்வுதயணமன்னன் கூறுவான் ''அமைச்சனே! நீ நினக்கும் எனக்கும்
உட்பகைமை உண்டென்று இவ்விடத்தே எய்தியுள்ள நம் படைஞர்க்கெல்லாம் விளங்கும்படி
கூறிவிட்டு அப்பகைமை காரணமாகப் போவோய் போன்று என்னை விட்டு நம் பகைப்புலத்தே
செல்லக் கடவை; சென்று அவ்விடத்தே அவ்வாருணியரசனுக்குச் சுற்றத்தாராகிய அவன் அன்பர்
உளராயவிடத்தே அவரோடும் செறிந்த கேண்மையுடையையாய் விடுக ! அங்ஙனம் ஆயபின்னர்
அவர் வெளியிடும் மொழிகளையும் கேட்டுணர்ந்து கொள்க''
என்க.
|
|
(விளக்கம்) அஃது - முன்னர் யாம் செய்திருந்த முடிவு. இது இப்பொழுது யான்
ஆராய்ந்து தெளிந்த செயலை. வாங்கு - வளைந்த. நீப்பு - உட்பகை. இவண் - இவ்விடத்து.
நமர் - நம்படைத்தலைவர் முதலியோர். அவற்கு : ஆருணியரசனுக்கு. பாங்காகிய ஆர்வலர் -
பக்கத்தேயுள்ள அன்பர். மிகச்செறிவுடையையாய் விடு - மிகவும் நெருங்கிய நண்பனாய்
விடு. மதி : முன்னிலையசை. விடூஉம் - அவர்கள் வெளியிடுகின்ற. கொண்மோ - மோ :
முன்னிலையசை.
|