உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
நன்கினி
துரைக்குமவ னுரைக்கு மாயினும் 75
வெஞ்சொன் மாற்றம் வேந்தரை
யுரைத்தோர்
அஞ்சுக வென்னுந் தொன்மொழி
யுண்மையின்
நெஞ்சுநீ நெகிழ்ந்தவற் றெளியலை
செல்லென
மணித்தகைப் பைம்பூண் மகதவர்
கோமான்
பணித்தது மறாமையிற் படையென வந்தனென்
80 மற்றது மன்னவ னுற்றிவண்
செய்ததோர்
முன்னுப கார முடைமையி னாகும்
|
|
(இதுவுமது) 74
- 81 : ஆயினும்.........ஆகும்
|
|
(பொழிப்புரை) ''அவ்வுதயணன் அங்ஙனம் இனிதாகவே பேசினும் 'வெஞ்சொன் மாற்றம்
வேந்தரை யுரைத்தோர் அஞ்சுக' என்னும் ஒரு பழமொழியுண்டாகலான், அம்மொழிப்படியே நீ
அவன் மொழி கேட்டுழி நெஞ்சு நெகிழ்ந்து அவற்றைத் தெளியாதே கொள் ! இவ்வறிவுரையை
மறந்து விடாமல் அவனோடு செல்வாயாக என்று எங்கோமகன், எனக்குக் கட்டளையிட்டமையால்
அதனை மறாது யானும் அவ்வுதயணனுக்குத் துணைப்படை போல வந்தேன்; அங்ஙனம் அம்மகத மன்னன்
என்னை இவனொடு உய்த்ததும், இவ்வுதயண மன்னன் தானே வந்து எமக்குச் செய்த ஒரு நன்றிக்
கடமை அத்தருசக மன்னன் உடையனாய் இருந்ததனாலே தான்'';
என்க.
|
|
(விளக்கம்) ''வெஞ்சொன்மாற்றம் வேந்தரை யுரைத்தோர் அஞ்சுக'' என்னும்
இத்தொடர் ஒரு பழமொழி. நாம் அவ்வுதயணனைப் பற்றி வெஞ்சொல் கூறியுள்ளேம். ஆதலின்,
அவனுக்கு நாம் எப்பொழுதும் அஞ்சியே இருத்தல் வேண்டும். எப்பொழுதும் அவன் செவ்வி
பார்த்துத் தீங்கு இயற்ற முற்படுதல் இயல்பு என்பது கருத்து. மற்றதும் - அங்ஙனம்
அம்மன்னன் ஏவியதும். அன்னவன்:
அவ்வுதயணன்.
|