உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
பலர்புகழ்
விழுச்சீர்ப் பாஞ்சால ராயனொடு
செலவயர் வுடைய சேனா
பதிமகன் என்னுழை
விடுத்தன னிருநூ றியானையும்
பொன்னணி புனைதார்ப் புரவி பூண்ட
145 ஐம்பது தேரு மாயிரங்
குதிரையும்
தன்பெயர் கொளீஇத் தானினி
தாள்கென மன்பெருஞ்
சிறப்பிற் கொன்னூ ரறுபதும்
பாவடி மடப்பிடி பதினைந்
திரட்டியும் மாவடி
மடக்கண் மாதர் மென்முலை 150 நாடக
மகளிர் நாலிரு பதின்மரும்
அடுத்து விழுநிதி பலவும்
பிறவும் ஆண
முடைத்தாக் கொடுப்பன் மற்றவ்
|
|
(சேனாபதி
மகன்
கூறுதல்)
141 - 152 : பலர்.........கொடுப்பன்
|
|
(பொழிப்புரை) அம்மறவர்களுள் ஒருவனாக மாறுவேடத்தில் வந்திருந்தவனும் பலராலும்
புகழப்படுகின்ற சிறந்த புகழையுடைய ஆருணி மன்னனோடு பகைமேற் செல்லுதலையுடைய
சேனாபதியின் மகனும் ஆகிய ஒரு பகைமறவன் அவ்வருடகாரன் மொழியைக் கேட்டிருந்தவன்
அவ்வருடகாரனுக்கு மறைவாகக் கூறுபவன் ''ஐய ! அவ்வாருணி மன்னன் இவ்வுதயணன் போன்று
நன்றி மறப்பவனல்லன். அவன் என்பால் இருநூறு யானைகளையும், பொன் அணிகலன் அணிந்த
மாலையணிந்த குதிரைகள்பூட்டிய ஐம்பது தேர்களையும், ஆயிரங் குதிரைகளையும் யான் நினக்கு
வழங்குவேன் நீ உன்னுடைய பெயரைவைத்து இவற்றையெல்லாம் இனிதே யாள்க! என்று கூறி
அவற்றின் மேலும் நிலைபெற்ற பெருஞ்சிறப்பினையுடைய அறுபது ஊர்களையும் பரவிய அடியையுடைய
முப்பது இளைய பிடியானைகளையும், மாவடுப்போன்ற அழகிய கண்ணையுடைய அழகிய மெல்லிய
முலையினையுடைய நாடகமகளிர் எண்பதின்மரையும், வழங்கி மேலும் சிறந்த பொருள்கள்
பலவற்றையும் இன்னோரன்ன பிறவற்றையும் என்பால் வைத்துள்ளான். அவற்றையெல்லாம்
நினக்குப் பாதுகாவலின் பொருட்டு யானே தருகுவன்''; என்க.
|
|
(விளக்கம்) பாஞ்சாலராயன் - ஆருணியரசன். செலவயர்வுடைய சேனாபதி மகன் -
பகைமேற் செல்லுதலையுடைய சேனாபதி மகன் என்க. என்னுழை - என்பால். என்னுழைவிடுத்தனன்
அவற்றை யான் நினக்குக் கொடுப்பேன் என்றான் என்க. பாவடி - பரவிய அடி. மாவடி
மடக்கண் - மாவடுவின் பிளவுபோன்ற மடப்பமுடைய கண். ஆணம் -
பாதுகாப்பு.
|