உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
160 ஆய்பெருங் குருசி லதுநனி
விரும்பி நீயே
சென்றவன் வாயது கேட்டு
வலிப்பதை யெல்லா மொளித்தனை
யுணர்ந்து வல்லே
வருதி யாயி னெமக்கோர்
செல்சார் வாகிச் சிறந்தோய் நீயென
|
|
(வருடகாரன்
கூற்று)
160 - 164 : ஆய்.........நீயென
|
|
(பொழிப்புரை) ஆராய்ச்சியையுடைய பெரும் படைத்தலைவனாகிய அவ்வருடகாரன் அவன்
அழைப்பினைப் பெரிதும் விரும்பி, ''ஐய! அங்ஙனமாயின் இவ்வுபாயத்தைச் சொன்ன நீயே
என் பொருட்டு அம்மன்னனிடம் சென்று கூறி அவன் மொழியையும் கேட்டு அவன்
துணிவதையெல்லாம் எளிமையுடையையாய் இருந்து அறிந்துகொண்டு விரைந்து என்பால் வந்து
அறிவிப்பாயாயின் நீ எனக்கு ஒரு புகலிடமாகிச் சிறந்தோய் ஆகுவை'' என்று
வேண்டிக்கொண்டு; என்க.
|
|
(விளக்கம்) அவன் அழைப்பின்வாயிலாய்த் தான் மேற்கொண்டுள்ள காரியத்தைச்
செய்துமுடிக்க வழிதேடுபவன் என்பது தோன்ற ஆய்பெருங் குருசில் என்றார் அது -
அவ்வழைப்பினை, வாயது - மறுமொழி. வலிப்பதை-துணிவதனை. எளித்தனை-எளிமையையுடையையாய்
இருந்து. செல்சார்வு - புகலிடம்.
|