பக்கம் எண் :

பக்கம் எண்:487

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
         
    165    எல்லிருள் விடுப்ப வெழுந்தனன் போகி
          வஞ்சச் சூழ்ச்சி வருட காரன்
          தன்சொல் லெல்லாஞ் சென்றவ னுரைப்பக்
 
        (சேனாபதி மகன் ஆருணியிடம் சென்று அறிவித்தல்)
                165 - 167 : எல்லிருள்.........உரைப்ப
 
(பொழிப்புரை) அச்சேனாபதி மகனை அவ்விரவிலேயே ஏவா நிற்ப அவனும் விரைந்துபோய்த் தன்பால் வஞ்சகச் சூழ்ச்சியையுடைய அவ்வருடகாரன் கூறிய மொழியெல்லாம் வாய்மையென்றே கருதி அவ்வாருணி மன்னன்பாற் சென்று கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) எல்லிருள் - இரவிருள். ஆருணி மன்னன்பாற் சென்று என்க.