(பொழிப்புரை) தன்பால் வந்தவனாகிய அச்சேனாபதி மகனை அச்சகுனி கௌசிகனுக்குக்
காட்டி........................அச்சகுனி கௌசிகனோடு வேறு மூவரையும் சேர்த்து
'.நீவிர் நால்வரும் இவனுடன் சென்று நம் பகைவர் மேற்கொண்டுள்ள செயலின்கண் நாம்
அறிதற்கு வேண்டிய பொருளையெல்லாம் நீவிர் நம் பகைப் புலத்திற்சென்று இன்னும் நன்று
அறிந்து வாருங்கோள்!'' என்று பணிப்ப, அதுகேட்ட அந் நன்றறிவாளர் நால்வரும்
''எம்பெருமான் அருளியதெல்லாம் ஆகுக'' என்று அம்மன்னனுடைய திருவடிகளைப் பணிந்து மாறுவேடங்
கொண்டு அவ்விருளினூடே சென்று அவ்வருடகாரனையடைந்தனர்;
என்க.
(விளக்கம்) சென்றவன் : தன்பால் வந்த சேனாபதி. நால்வர் - சகுனி கௌசிகனும்
வேறு மூவரும். அருளியதெல்லாம் - கட்டளையிட்ட காரியமெல்லாம். அவன் :
வருடகாரன். மறைந்து - மாறுவேடங்கொண்டு.