பக்கம் எண் :

பக்கம் எண்:492

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
          றோடினை சொல்லென நீடுத லின்றி
          வகைமிகு தானை வத்தவற் குறுகித்
          தகைமிகு சிறப்பிற் றார காரி
     15    உணர்த்தா மாத்திர மனத்தகம் புகன்று
 
               (தாரகாரியின் செயல்)
           12 - 15 : நீடுதலின்றி ....... மாத்திரம்
 
(பொழிப்புரை) அதுகேட்ட பெருந்தகைமை மிக்க சிறப்பினையுடைய  தாரகாரி காலந்தாழ்த்தலின்றிப் பல்வேறு வகையான் மிக்க படையினையுடைய வத்தவ மன்னனை யணுகி அச்செய்தியை உணர்த்துமளவிலே; என்க.
 
(விளக்கம்) நீடுதலின்றி - காலந்தாழ்த்தலின்றி. வத்தவன் -  உதயணன். தகை - பெருந்தகைமை.