| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 26. பாஞ்சாலராயன் போதரவு |
| |
15 உணர்த்தா மாத்திர மனத்தகம்
புகன்று பிங்கல சார
மாணி முதலாப்
பைங்கழன் மறவர் பதின்மரைக்
கூஉய் ஆடியல் யானை
யாருணி தூதுவர்
மாடியந் தானை வருட காரனொடு 20
கூடிய வந்தனர் கொணர்மின் சென்றென
|
| |
(உதயணன்
செயல்)
15 - 20 : மனத்தகம் .......... சென்றென
|
| |
| (பொழிப்புரை) அதுகேட்ட 'உதயண மன்னன் தன்னுள்ளுள்ளே உவந்து பிங்கலசாரமாணி
என்னும் தலைவனையுள்ளிட்ட பசிய வீரக்கழல் கட்டிய மறவர் பதின்மரை யழைத்து, ''மறவர்
காள்! அசையும் இயல்புடைய யானையையுடைய ஆருணி மன்னனுடைய தூதுவர் மெய்க்காப்புடைய
படையையுடைய வருடகாரனோடு கேண்மை கொள்ளுதற்கு வந்துள்ளனர். அவரை நீவிர் சென்று
பற்றிக்கொடு வாருங்கோள்!'' என்று கட்டளையிடா நிற்ப;
என்க.
|
| |
| (விளக்கம்) பிங்கலசாரமாணி - ஒரு தலைவன். கூஉய் - அழைத்து. ஆடியல் -
அசையுந்தன்மை. மாடியம் - மெய்க்காப்பு : கவசம். ''மாடியந்தானை மன்னர்'' (சீவக.
537) என்புழியும் அஃதப் பொருட்டாதல் உணர்க. கூடிய -
கூடுதற்கு.
|