பக்கம் எண் :

பக்கம் எண்:494

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           நிறைநீ ரகவயிற் பிறழுங் கெண்டையைச்
           சிறுசிர லெறியுஞ் செய்கை போல
           உறுபுக ழுதயணன் றறுகண் மறவர்
           பற்றுபு கொண்டுதங் கொற்றவற் காட்ட
 
                  (மறவர் செயல்)
              21 - 24 : நிறைநீ ......... காட்ட
 
(பொழிப்புரை) அக்கட்டளையை மேற்கொண்ட மிக்க புகழையுடைய உதயணனுடைய அஞ்சாமையையுடைய அம்மறவர்கள் அப்பொழுதே சென்று நிறைந்த வெள்ளத்தின்கண் நீரினுள்ளே பிறழாநின்ற கெண்டைமீனைச் சிறிய மீன்கொத்தும் குருவி, காலால் எறிந்து எடுக்கும் செயல்போல அத்தூதுவரை எளிதாகப் பற்றிக் கொணர்ந்து தம்மரசனுக்குக் காட்டா நிற்ப; என்க.
 
(விளக்கம்) நிறைநீர் - வெள்ளம். சிரல் - மீன்கொத்தும் குருவி. உறுபுகழ் - மிக்கபுகழ். தறுகண் - அஞ்சாமை. பற்றுபு - பற்றி. கொற்றவன் : உதயணன்.