பக்கம் எண் :

பக்கம் எண்:495

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
         
     25    இடவகன் கையு ளிருக்க விவரெனத்
           தடவரை மார்பன் றலைத்தா ளுய்ப்ப
 
                   (உதயணன் செயல்)
             25 - 26 : இடவகன் ........ உய்ப்ப
 
(பொழிப்புரை) அத்தூதுவரைக் கண்ட பெரியமலை போன்ற மார்பினையுடைய உதயணன் இத்தூதுவர் இடவகன் கையகத்தே இருப்பாராக என்று அம்மறவருக்குக் கூறி அவ்விடவகன் முன்னிலையில் அவரைச் செலுத்தாநிற்ப; என்க.
 
(விளக்கம்) கையுள் இருக்க என்றது அவன் பார்வையில் இருப்பாராக என்றவாறு. மார்பன் ; உதயணன். தலைத்தாள் : முன்னிலை.