உரை |
|
3. மகத காண்டம் |
|
26. பாஞ்சாலராயன் போதரவு |
|
40 மறஞ்சால்
பெரும்படை வருட காரனும்
அறஞ்சால் கெண்ணிய தவப்பட்
டதுவெனக் கைவிரல்
பிசைந்து செய்வதை யறியான்
வந்தோர் தெளிய நொந்தன னுவல
|
|
(வருடகாரனது
நடிப்பு)
40 - 43 :
மறஞ்சால் ......... நுவல
|
|
(பொழிப்புரை) (பொழிப்புரை)
இந்நிகழ்ச்சியை
உணர்ந்து கொண்டு வீரமிக்க பெரிய படையையுடைய அவ்வருடகாரனும் ஆருணிமன்னனிடத்திலிருந்து
தன் பால் வந்த பகைப் புலத்தார் தன்னை ஐயுறாமல் தெளிந்து கொள்ளும் பொருட்டு,
''அந்தோ! அறம் சிறக்க ! யாம் நினைத்த காரியம் கெட்டொழிந்தது'' என்று கூறித்
தன் கைவிரல்களைப் பிசைந்து கொண்டு இனிச் செய்வது என்ன என்று தெரியாது திகைப்பான்
போன்றும் பெரிதும் மனம் நொந்தவன் போன்றும் கூறா நிற்ப;
என்க.
|
|
(விளக்கம்) அறம் சால்க - தருமம் சிறக்க. என்னுமிது அப்பகைவர் தான்
செய்யும் செயலெல்லாம் அறத்தின்பாற் பட்டன என்று கருதுதற் பொருட்டென்க. அவப்பட்டது
- வீணாகிவிட்டது. வந்தோர் - ஆருணியினிடத்திருந்து வந்தவர். நுவல - கூறா
நிற்ப.
|