பக்கம் எண் :

பக்கம் எண்:500

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           விடைப்பே ரமைச்சனுழை விடுத்தலின் மற்றவன்
           கண்டவர் நடுங்கத் தண்டந் தூக்கி
           இன்னுயிர் தபுக்கென வெரியகத் திட்டதும்
           பின்னர் மற்றவன் பெருமலை யடுத்ததும்
     55    நம்மொடு புணர்ந்த நண்புடை யாளன்
           எம்மொடு போதந் திப்பாற் பட்டதும்
           இன்னவை நிகழ்ந்தவென மன்னவற் குரைப்ப
 
                   (இதுவுமது)
            51 - 57 : மற்றவன்.........உரைப்ப
 
(பொழிப்புரை) அந்த இடவகன் கண்டோர் நடுங்கும்படி அத்தூதுவர்க்குரிய தண்டனையை ஆராய்ந்து இவரை உயிர் போக்குக எனக் கட்டளையிட்டதும், அத்தூதுவரை நெருப்பிற்றள்ளிக் கொன்றதும், பின்னர் உதயணன் அவ்விடத்தினின்றும் சென்று தவதிசயந்தம் என்னும் பெரிய மலையையடுத்ததும், நம்மோடு கூடிய நட்புடையவனாகிய வருடகாரன் செயலற்று எங்களோடு வந்து எம்மோடேயே இருப்பதும், ஆகிய இந்நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்று அவ்வாருணி மன்னனுக்குக் கூறாநிற்ப ; என்க.
 
(விளக்கம்) மற்றவன் : அவ்விடவகன். தண்டந்தூக்கி - தண்டனையை ஆராய்ந்து. தபுக்க - அகற்ற. நண்புடையாளன் : வருடகாரன். மன்னவன் : ஆருணி.