| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 26. பாஞ்சாலராயன் போதரவு |
| |
அடக்கருஞ் சீற்றத்
தாருணி கழலடி
வடுத்தீர் வருடகன் வணங்கினன் காண
|
| |
(வருடகாரன்
செயல்) 86
- 87 : அடக்கரும்.........காண
|
| |
| (பொழிப்புரை) குற்றமற்ற வருடகாரன்
அம்மன்னனுக்கு எதிர்சென்று அடக்குதற்கரிய சினத்தையுடைய அந்த ஆருணி மன்னனுடைய
வீரக்கழல்கட்டிய அடிகளிலே வீழ்ந்துவணங்கி அம் மன்னனைக் காணாநிற்ப ;
என்க.
|
| |
| (விளக்கம்) சீற்றத்து - சினத்தையுடைய. கழலடி - கழல்கட்டிய அடி. வடு -
குற்றம். வருடகன் - வருடகாரன்.
|