உரை |
|
3. மகத காண்டம் |
|
26. பாஞ்சாலராயன் போதரவு |
|
காணமும் வழங்கி
நாணா
டோறும்
ஊனிடை யறாமை யுணாத்தந்
திடூஉம்
சேனை வாணிகஞ் செறியக் காக்கென |
|
(இதுவுமது) 96
- 98 : நாணாள்.........காக்கென |
|
(பொழிப்புரை) அம்மன்னவன்,
''அமைச்சனே ! நீ நாள்தோறும் நம்படைகளுக்கு ஊன் இடையறவின்றிச் சிறந்த உணவுகளை
விலைக்குக் கொடுக்கும் தொழிலை உறுதியாகப் பேணிவருக'' என்றும் அறிவுறுத்தியபின்,
என்க. |
|
(விளக்கம்) இடையறாது ஊன்விரவிய உணா என்றவாறு. உணா - உணவு. விலைக்குத்
தந்திடும் என்க. காக்க - பேணுக. |