உரை |
|
3. மகத காண்டம் |
|
4. புறத்தொடுங்கியது |
|
இட்டிகைப்
படுகாற் குட்டக் கோணத்
துத்தர மருங்கி னத்தினஞ்
சொரிந்த மணிதெளித்
தன்ன வணிநிறத் தெண்ணீர்ப்
40 பெருந்தண் பொய்கை மருங்கிற் குலாஅய்ச் |
|
(பொய்கை) 37-40 ;
இட்டிகை............குலாஅய் |
|
(பொழிப்புரை) வடகிழக்குத்
திசையிலே செங்கல்லானியன்ற படிக்கட்டுகளோடு ஆழமானதும் சங்கீன்ற
முத்தினைக் கரைத்துத் தெளியவைத்தாற்போன்ற அழகிய நிறத்தையுடைய
தெளிந்த நீர் நிரம்பியதுமாகிய பெரிய குளிர்ந்த பொய்கையின்
பக்கங்களைச் சூழ்ந்தென்க, |
|
(விளக்கம்) இட்டிகை-செங்கல். படுகால் - படி. உத்தரகோண மருங்கின் என்க. அது
வடகிழக்கு என்க. நத்தினம் - சங்குகள். மணி-முத்து.
குலாய்-சூழ்ந்து. |