பக்கம் எண் :

பக்கம் எண்:510

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           கல்லிடை யிட்ட காட்டகங் கடந்து
           வெள்ளிடைப் புகுந்த வேட்டுவப் படையினை
           ஆட்டுதுஞ் சென்றென வத்திசை மருங்கினும்
     25    வாட்படை வகுத்துச் சேட்படப் போக்கி
           மறுத்து முரைத்தனன் மன்னவன் கேட்ப
 
                      (இதுவுமது)
                22 - 26 : கல் ......... கேட்ப
 
(பொழிப்புரை) ''வேந்தே ! மலையிடையிட்ட காட்டினைக் கடந்து வெள்ளிடையிலே புகுந்த வேட்டுவப் படைகளுக்கு ஆற்றல் குறைதல் இயல்பாகலின் அப்படையினை நாம் சென்று அலைப்போம்'' என்று கூறி அத்திசைநோக்கி ஆங்குள்ள வாட் படைகளுள் ஒருபகுதியை அணிவகுத்துத் தூரத்தே செல்லும் படி போக்கியபின்னர் அவ்வருடகாரன் ஆருணி மன்னன் கேட்கும்படி கூறினன்; என்க.
 
(விளக்கம்) கல் - மலை. வேடர்கள் தமக்குரிய காட்டகத்தைக் கடந்து வெள்ளிடையில் வருவாராயின் வலியற்றவர் ஆவர் என்பது கருதி இங்ஙனம் கூறினன். வெள்ளிடை - பாழ்வெளி. ஆட்டுதும் - தாக்கி அலைப்போம். மறுத்தும் - மீட்டும். மன்னவன் - ஆருணி.