| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 27. பறை விட்டது |
| |
கருதிய
தெல்லாங் கால்வ
லிளையரின்
உருவ வெண்குடை யுதயணற் குணர்த்த |
| |
(வருடகாரன்
செயல்)
41 - 42 : கருதிய ......... உணர்த்த |
| |
| (பொழிப்புரை) இவ்வாறு ஆருணியின் உடன்பாடுணர்ந்த
வருடகாரன் ஈண்டுத் தாங்கள் கருதிய செயல்களையெல்லாம் தன்னுடைய கால்வல் இளைஞரின்
வாயிலாய் அழகிய கொற்ற வெண்குடையையுடைய உதயண மன்னனுக்கு அறிவித்துவிடுதலாலே;
என்க. |
| |
| (விளக்கம்) கருதியதெல்லாம் - போர்த்தொழில்பற்றி ஆருணியும் தானும் கருதியிருக்கின்ற
செயல் முறைகளையெல்லாம் என்க. உருவம் -
அழகு. |